வல்லினம், ஐ, மரியான் என்று ஒரே கூரையின் கீழ் உருவாகி வரும் படங்களால் ரசிகர்களுக்கு குஷி. அதே நேரத்தில் தயாரிப்பாளருக்கு டென்ஷன். இப்படங்களின் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன் வல்லினத்தை ஆறு கோடியிலும், மரியானை பதினைந்து கோடியிலும், ஐ படத்தை 80 கோடியிலும் உருவாக்கி வருவதாக சொல்கின்றன கோடம்பாக்கத்து புள்ளி விபரங்கள். இவ்வளவு சிறப்பாக படங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் அவருக்கே நடுக்கம் வருகிற மாதிரி இருக்கிறதாம் மரியான், மற்றும் வல்லினம் படத்திற்கு விநியோகஸ்தர்களால் வைக்கப்படும் விலை. நகுல் நடித்த ஒரு படமும் ஓடவில்லை. தனுஷ் நடித்து வெற்றி பெற்ற கடைசி படம் ஆடுகளம். அதற்கப்புறம் வந்த எந்த தனுஷ் படமும் ஓடவில்லை. நிலைமை இப்படியிருக்க எந்த நம்பிக்கையில் இந்த இரு படங்களையும் வாங்குறது என்கிறார்களாம் அவர்கள்.
இதற்கான துருப்பு சீட்டாகதான் அமைந்திருக்கிறது ஐ. இந்த படங்களை யார் வாங்குறீங்களோ, அவங்களுக்குதான் ஐ என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறாராம் ஆஸ்கர் ரவிச்சந்திரன். மரியானையும் வல்லினத்தையும் வாங்க விநியோகஸ்தர்கள் தயங்கினாலும் ஒரே மூச்சில் உலகம் முழுக்க சொந்தமாகவே வெளியிடுகிற கெப்பாசிடி உள்ள நிறுவனம்தான் ஆஸ்கர். அதுவேறு விஷயம்.
இதற்கிடையில் ஐ படத்தின் பட்ஜெட் 140 கோடி என்று ஆஸ்கர் தரப்பு செய்தியை கொளுத்திப் போட, எதுக்காக இவ்வளவு ஏத்தி சொல்றாங்க.... செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...