Thursday, April 4, 2013

சென்னையில் ஒரு நாள் - திரைப்பட விமர்சனம்


உண்மை சம்பவங்கள் படமாகும்போது யாராவது ஒருவர் கோர்ட் படியேறி 'ஞாயமாரேய்ய்ய்ய்...' என்று கூக்குரலிடுவது அண்மைகால வழக்கமாக இருக்கிறது. இப்படத்தின் கதையும் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டதுதான். ஆனால் கோர்ட்டுக்கு பதிலாக கோவிலுக்கு போக வைக்கிறார்கள். மகனை உயிரோடு பறிகொடுத்த அந்த தாய்க்கும் தந்தைக்கும் மன சாந்தியை கொடு என்று வேண்ட வைக்கிறார்கள். அதுதான் இந்த படத்தின் வெற்றியும் கூட.


சென்னையில் துடிக்கும் இதயம் ஒன்றை, வேலு£ரில் துடிதுடித்துக் கொண்டிருக்கும் ஒரு உயிருக்கு கொண்டு செல்ல வேண்டும். அதுவும் 90 நிமிடங்களில். இடைபட்ட து£ரம் 170 கிலோ மீட்டர். மருத்துவர்களும், காவல்துறையும் ஓட்டமாய் ஓட வேண்டிய நிர்பந்தம். இதையே காட்சியாக பார்க்கிற நம்மையும் ஓட வைக்க வேண்டுமல்லவா? அப்படி நடந்ததா என்பதுதான் சென்னையில் ஒரு நாள்.

ஒரு உண்மை சம்பவம் படமாக்கப்பட, அதுவும் வியாபார ஏரியாவையும் நிறைவு செய்ய என்னவெல்லாம் கழைக் கூத்தாட வேண்டியிருக்கிறது? பிரசன்னா இனியா எபிசோட் அதைதான் சொல்ல வருகிறது. ஆனால் இதையே கருவியாக வைத்துக் கொண்டு இயக்குனர் தந்திருக்கும் இன்டர்வெல் ட்விஸ்ட் யாருமே எதிர்பார்க்காதது. ஒவ்வொரு வினாடியும் ஒரு நிமிஷத்துக்கு சமம் என்கிற நிலையில் காரை காரிலிருக்கிற ஒருவரே கடத்தி நேரத்தை வீணடித்தால் எப்படியிருக்கும்? நுனி சீட்டை நொறுங்க வைத்து நகத்தையெல்லாம் கடித்து துப்ப வைக்கிறது பரபரப்பு.

தனக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்க ஏதாவது செய்தாக வேண்டும் என்று நினைக்கிற நேரத்தில் சேரனுக்கு அமைகிறது இதயத்தை கொண்டு செல்லும் காரை ஓட்டுகிற பொறுப்பு. செய்து விடுவோம் என்ற நம்பிக்கை அந்த முகத்தில் ஒளிர வேண்டாமா? எந்த நேரத்தில் ஆக்சிலேட்டர் வயர்... விமர்சனத்தை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...

Subscribe to get more videos :