ஒருகாலத்தில் 'சாக்லெட் பாய்' என்று எந்த ஹீரோவை அழைத்தாலும், அவர்களுக்கு சந்தோஷம் பிய்த்துக் கொள்ளும். இப்போதோ நிலைமையே வேறு! 'சாக்லெட் பாய்' என்றால் வேலைக்கு ஆகாத ஹீரோ என்ற முத்திரை விழுந்துவிட்டது.
இந்த கொடூரமான காலகட்டத்தில் யூடிவி தனஞ்செயன் சித்தார்த்தை சாக்லெட் பாய் என்று அழைக்க, பதறியபடி மைக்கை பிடித்தார் சித்தார்த். 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தின் பிரஸ்மீட்டில்தான் இந்த கூத்து. 'எனக்கு பிடிக்காத வார்த்தைன்னு ஒண்ணு இருக்குன்னா அது இந்த சாக்லெட் பாய்தான்' என்று பேச ஆரம்பித்தார் சித்தார்த்.
தமிழ்ல எனக்கு நிறைய படங்கள் வர்றதில்லேன்னு ஒரு வருத்தம் இருக்கு. நான் வியக்கிற ஹீரோக்கள் சிலர் முன்னணி டைரக்டர்களை பார்த்து வாய்ப்பு கேட்கிறாங்கன்னு என் பிரண்ட்ஸ் சில பேர் சொன்னதை என்னால நம்ப முடியல. இருந்தாலும் ஒரு நிகழ்ச்சியில் சுந்தர்சியை பார்த்தேன். சார் உங்க படத்தில நடிக்க ஆர்வமா இருக்கேன். எப்ப வேணும்னாலும் கால்ஷீட் தர்றேன்னு சொன்னேன். அதற்கப்புறம் கிடைச்ச வாய்ப்புதான் இது என்றார்.
இப்படியொரு அருமையான தலைப்பு எனக்கு கிடைக்க காரணமா இருந்தவர் என்னோட நண்பர் நிதின் சத்யாதான். ஒருமுறை அவர் எனக்கு ஒரு புகைப்படத்தை மெயிலில் அனுப்பியிருந்தார். அந்த படம் என்னன்னு அப்புறம் சொல்றேன். அதுக்கு பக்கத்தில் 'தீயா வேலை செய்யணும்' என்று எழுதப்பட்டிருந்தது. பார்த்ததுமே எனக்கு அந்த புகைப்படமும் கேப்ஷனும் ரொம்ப பிடிச்சிருந்தது. இந்த கதையில் சித்தார்த்தின் பெயர் குமார். அதையும் சேர்த்து படிச்சதும் சூப்பரா ஒரு டைட்டில் வந்துச்சு... செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..
http://j.mp/14UzRag