Monday, June 3, 2013

குட்டிப்புலி - விமர்சனம்


குட்டிப்புலியை ஓபாமா பார்த்திருந்தால் தன் நாட்டு சுற்றுலா பயணிகளை மதுரை பக்கம் எட்டிப்பார்க்கவே வேண்டாம் என்று எச்சரித்திருருப்பார். மதுரைக்காரய்ங்க எல்லாரும் அருவா முனையிலதான் பேஸ்ட் வச்சு பல் விளக்குவாய்ங்க என்கிற தோற்றத்தை ஏற்படுத்துகிறது இப்படம்.



சுப்ரமணியபுரம், நாடோடிகள், சுந்தரபாண்டியன் வரிசையில் இந்த முறையும் அரிவாளுக்கு ஆயுத பூஜை நடத்தியிருக்கிற அரும்பணியை திறம்பட செய்திருக்கிறார் சசிகுமார். உடன் உதவிய புதுமுக இயக்குனர் முத்தையாவுக்கு 'ரத்த' கையெழுத்துடன் ஒரு கடிதம் எழுதலாம்.



நாங்க கும்புடுற குலசாமியெல்லாம் என்ன காரியம் பண்ணிட்டு இப்படி சிலையா நிக்குதுங்க என்கிற அதிர்ச்சிகரமான உண்மையை சரண்யா கேரக்டர் மூலம் சொல்லியிருக்கிறார் டைரக்டர். படத்தில் சரண்யா ஏற்படுத்திய குல நடுக்கம் பத்து தீமிதி, பனிரெண்டு அலகு குத்தலுக்கு சமம்!



ஊரில் வெட்டியாக திரியாமல் ஏதோவொரு வேலையோடு திரிகிறார் சசிகுமார். இவருக்கு காதல் என்றாலோ கல்யாணம் என்றாலோ மூக்கு மேல் கோபம் வருகிற அளவுக்கு அலர்ஜி. போற இடத்துல எல்லாம் எதிரியை சம்பாதிச்சு வச்சுருக்கோம். எங்க எவன் போடுவான்னே தெரியாது. இந்த லட்சணத்துல நமக்கெதுக்கு குடும்பம், குட்டி என்பதுதான் குட்டிப்புலியின் லாஜிக். இதெல்லாம் புரியாத லட்சுமி மேனன் சசிகுமாரை லுக் விட, ஆரம்பத்தில் சைடு வாங்கி தப்பிக்கிறது குட்டிப்புலி. அதற்கப்புறம் இவரும் காதலில் விழ... பல வருஷமாக கல்யாணமே வேண்டாம் என்று முரண்டு பிடித்த மகன் காதலிக்கிறான் என்றதும் சந்தோஷம் கரைபுரண்டோடுகிறது அம்மா சரண்யாவுக்கு. இந்த வைபோக வாழ்க்கைக்கு எதிராக அருவா தீட்டும் வில்லனை அப்படியே இழுத்து வச்சு அறுப்பதோடு படம் எண்ட்!



இப்பவாவது பெண் தெய்வங்களின் பேக்ரவுண்டு புரியுதா உங்களுக்கெல்லாம்? என்கிற ஷார்ப் கேள்வியோடு நம்மை வழியனுப்பி வைக்கிறார் டைரக்டர் முத்தையா. இந்த 'சுப்பிரமணிய சுந்தரபாண்டிய' கதையை மறுபடியும் ஒருமுறை ரசிக்க வைத்திருப்பதே இப்படத்தின் ப்ளஸ்.



ஒட்ட நறுக்கிய ஹேர் ஸ்டைல், சற்றே முறுக்கிவிடப்பட்ட மீசை, பின்னால் கையை கட்டிக்கொண்டு நடக்கிற அலட்சியம். இப்படி மதுரக்காரனின் தீவிரத்தை பாடி லாங்குவேஜில் பழக விடுகிறார் சசிகுமார். வார்த்தைக்கு வார்த்தை 'நம்மள்ளாம் பொம்பளைகள சாமியா நினைக்கிறவய்ங்க' என்று இவர் கூறுவதை பார்த்தால் திட்டம் பலமாக இருக்கும்போல தெரிகிறது. கம்பீரமான புலியாக இருந்தாலும்... விமர்சனத்தை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...


Subscribe to get more videos :