எடை மிஷின்ல ஏறி நின்றால், 'தயவு செஞ்சு கூட்டமா நிக்காதீங்க' என்று சீட்டு வருகிற அளவுக்கு, அவனவனுக்கு கவலைகளும், கஷ்டங்களும்! தியேட்டருக்குள் நுழையும்போது கவலையையும் சேர்த்துக் கொண்டு வெயிட்டாக நுழையும் யாரும், சுந்தர்சி படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது 'மைனஸ் வெயிட்டில்' இருப்பது நிச்சயம்! இந்த படத்தில் தீயா வேலை செஞ்சு மக்களை மறுபடியும் சிரிக்க வைத்திருக்கிறார் சு.சி. அதுவும் சித்தார்த் மாதிரி தொம்மைகளை வைத்துக்கொண்டு!
கதையே ஐ.டி கம்பெனியை சுற்றிதான். அதில் பாதி பேர் ஹன்சிகாவை சுற்றி வருகிறார்கள். மெழுகு, ப்ளஸ் அழகு, எப்படியாவது என்னோட பழகு என்று சித்தார்த்தும் கூட்டத்தோடு கூட்டமாக தள்ளுமுள்ளுவில் ஈடுபட, யாருக்கு ஹன்சிகா என்பதுதான் க்ளைமாக்ஸ்.
அந்த கம்பெனியிலேயே ஆணழகன் என்று சிலுப்பிக் கொண்டு திரியும் கணேஷ் வெங்கட்ராமுடன் போட்டிப் போட வேண்டிய அவல நிலைக்கு ஆளாகிறார் சித்தார்த். உயரமா இருக்கறதெல்லாம் ஒட்டக சிவிங்கி ஆகிவிட முடியுமா? கணேஷ் வெங்கட்ராமின் கம்பீரமும் அந்த ரகம்தான். இருந்தாலும் கதை அப்படிதானே சொல்கிறது. விடுங்கள்... இந்த ஒட்டக சிவிங்கியிடம் அந்த ஐ.டி கம்பெனி மொத்தமும் ஜொள் விட்டு திரிவதையெல்லாம் சகித்துக் கொண்டு படம் பார்ப்பவர்களுக்கு சந்தானம் என்கிற சர்வரோக நிவாரணியே பரிசாக கிடைப்பதால். விட்டு தள்ளுக!
பரம்பரையே லவ் மேரேஜ் பண்ணியிருந்தாலும், சொந்த லவ்வுக்காக சோக ராமாயணமே எழுத வேண்டிய அளவுக்கு தவிக்கிறார் சித்தார்த். ஹன்சிகாவிடம் லவ்வை சொல்ல இவர் படும் அவஸ்தைகள் மற்றும் தயக்கங்கள் எல்லாமே ஒருவித.... விமர்சனத்தை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...