நம்ம வெள்ளித்திரை இருக்கே, வெள்ளித்திரை... அது டி.வி.டிக்குள் இறங்கி, காலப்போக்கில் பென் டிரைவுக்குள் குடியேறி, இப்போது செல்போன்களின் ட்டூ ஜி.பி மெமரிக் கார்டுக்குள் போய்விட்டது. கதை சொல்லும் ஸ்டைலும் கிட்டதட்ட அப்படியே வேறு வடிவத்திற்கு போய் கொண்டிருக்கிறது. ஆனால் பாரதிராஜா? கால மாற்றங்களை கவனிக்காத, அல்லது கவனிக்க விரும்பாத பழமையோடுதான் இருக்கிறார் இன்னும். பதினாறு வயதினிலே, முதல் மரியாதை, நிறம் மாறாத பூக்கள், வேதம் புதிது உள்ளிட்ட ஒரு டசன் முத்துக்களையும் அவற்றை போலவே இன்னும் பல ரத்தினங்களையும் உருவாக்கிய பெருமைகளை எல்லாம், 'அன்னக் கொடி' படத்தில் வருமே, ஒரு ஆளுயர பானை! அதில் போட்டு அமுக்கி, அதை அதள பாதாளத்தில் உருட்டியும் விட்டிருக்கிறார் அவரே!
ஒருவேளை அவருக்கு கீழ வேலை செய்யும் 'அப்ரசண்டுகளை' நம்பி ஒப்படைத்துவிட்டு கேரவேனுக்குள் ரெஸ்ட் எடுக்க போயிருந்தாரோ என்னவோ? இவ்வளவு மோசமான படைப்பை எதிர்பார்க்கவே இல்லை எங்கள் பாசத்திற்(கூரிய) பாரதிராஜாவிடமிருந்து!
கதை என்னவோ பீரியட் பிலிம் வகையறாதான். அதற்காக கிராமத்து கிழவிகளெல்லாம் ஜாக்கெட் சேலையோடு திரிய, கதாநாயகி மட்டும் பின் முதுகை திறந்து போட்டுக் கொண்டு திரிகிற லட்சணத்தை என்னவென்று சொல்ல? தோளில் ஏறி உட்கார்ந்தா உலகம் சுத்தும்னு சொன்னீயே. ஒண்ணுமே சுத்தலையே? -இது ஹீரோயின். இதோ சுத்தும் பாரு என்று கூறிவிட்டு கழுத்தருகில் வாகாக இருக்கும் அவளது தொடையில் முத்தம் கொடுக்கிறார் ஹீரோ. இப்போ ஹீரோயினின் உலகம் மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் கண்கள் செருக, 'ஷகிலாவை வச்சு படம் எடுக்கணும்னு நினைச்சிருப்பாரு போல. அதான்' என்று சமாதானப்படுகிறது மனசு.
இன்னொரு காட்சியில் குழந்தைக்கு பால் கொடுக்க நினைக்கும் கார்த்திகா, அப்படியே பாலாடையை குறிப்பிட்ட ஏரியாவில் வைத்து அமுக்க, அங்கே பாலும் தியேட்டருக்குள்ளே ஜொள்ளும் வழிந்து ஆறாக ஓடுகிறது. எதை நினைத்து இது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டதோ, அதற்கான லாபம் எவ்வித கிழிசலும் இல்லாமல் முழுசாக போய் சேரட்டும். ஆங்... கிழிசல் என்றதும் ஞாபகத்திற்கு வருகிறது. சட்டை கிழிசலுக்கு நடுவே ஹீரோயின்... விமர்சனத்தை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...