நன்றாக இருக்கிற கண்ணாடிகளையெல்லாம் துடைக்கிறேன் பேர்வழி என்று உடைக்கிற -ஆசாமிகள் கோடம்பாக்கத்தில் பெருத்துப் போய்விட்டார்கள். இந்த ரீமேக் ரிவிட்டுக்கெல்லாம் ஒரு முடிவு வராதா என்று கூட்டமாக நின்று குமுறுகிற நேரத்தில் வந்திருக்கிறது தில்லுமுல்லு ரீமேக். 'உங்க எண்ணத்துல இடி விழ...' என்கிறார்கள் அசால்ட்டாக. பழைய தில்லுமுல்லுவை மேலும் பளிச் ஆக்கியிருக்கிறார்கள்.
முதலில் டைரக்டர் பத்ரி, சிவா, சூரி உள்ளிட்ட இந்த கூட்டணிக்கு சிரிப்பால் நெய்த சால்வையை போர்த்தி சந்தோஷப்படுகிறோமய்யா...!
'ஆங்கிரி மூக்கா... (பிரகாஷ்ராஜைதான் இப்படி) ஒரு வாரத்துக்கு நாலு தடவ தில்லுமுல்லு படத்தை டி.வியில போடுறான். அதை பார்த்த பிறகும் இவன் சொல்றதை நம்பியிருக்கேன்னா?' என்று சந்தானத்தின் வாயை வைத்து தன்னையே பிராண்டிக் கொள்கிற தைரியம் யாருக்கு வரும்? இவர்களுக்கு வந்திருக்கிறது.
இதற்கு பிறகும் இந்த படத்தின் கதையை நாம் சொன்னால் சந்தானமே வீடு தேடி அடிக்க வருவார் என்பதால் கோ டூ ஸ்ட்ரெயிட்!
அபூர்வ சகோதரர்கள் படத்திற்கு பிறகு ஒரு படத்தில் தனுஷ் குள்ளமாக வந்தார். அதற்கப்புறம் சிவா. (இந்த டெக்னிக்கை நாட்டு மக்களுக்கு முன் நீங்களாவது அவிழுங்களேன் நண்பா) இந்த காட்சியில் இவருக்கு அதிகம் டயலாக் இல்லை. ஆனால் அவர் முகம் வைத்திருக்கும் 'பிளேஸ்' குறித்து எழுகிற சிரிப்பலை அடங்க வெகு நேரம் ஆகிறது. இங்கு ஆரம்பிக்கிறது சிவாவின் சிவ தாண்டவம். அப்புறம் என்ட் கார்டு போடுகிற வரைக்கும் ஒரே கொண்டாட்டம்தான்.
சிவாவின் அலட்டிக்கொள்ளாத டயலாக் மாடுலேஷன்தான் இந்த படத்தின் முதல் பலமே. மனுஷன் என்னமாய் சீண்டுகிறார்! இவரது சீண்டலில் அம்மாம் பெரிய பேஸ்புக் கம்யூனிடியே... விமர்சனத்தை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...