Saturday, July 6, 2013

சிங்கம் 2 - விமர்சனம்



காக்கி சட்டையில் கரியை தடவியே பழக்கப்பட்ட கோடம்பாக்கத்தில் அவ்வப்போது சாமியையும், சிங்கத்தையும் காட்டி, போலீஸ் 'மெடல்' குத்திக் கொண்டு போவதில் வல்லவர் ஹரி. இதற்கு முன்பு வந்த போலீஸ் படங்களில் சில, டிபார்ட்மென்ட்டுக்கு மெடல் குத்துகிறேன் பேர்வழி என்று ரசிகர்களின் குடல்களை குத்திவிட்டு போன அவஸ்தையையெல்லாம் அதிவேகத்தில் மறக்கடிக்கிறது ஹரி சூர்யாவின் கம்பீர கூட்டணி. 



முதல் பார்ட் பார்க்காதவர்களை கூட இந்த செகன்ட் பார்ட்டில் தன்னை பொறுத்திக் கொள்கிற அளவுக்கு திரைக்கதையும், பரபரப்பும் நிலவுவதால், சூர்யாவின் வீச்சரிவாள் மீசைக்கு மூன்றாவது முறையும் ஆயுள் கூட்டப்படலாம். (தேர்ட் பார்ட் எப்போ ஹரி?) 



டைட்டில் ஓடும்போதே முந்தைய சிங்கத்திற்கும் இப்போதைய சிங்கத்திற்கும் முடிச்சு போட்டு விடுகிறார் டைரக்டர். எடுத்த எடுப்பிலேயே கதை சூடு பிடித்துக் கொள்கிறது. கடலோர பகுதிகளில் பிரவுன் சுகர் கடத்தும் லோக்கல் பெரிய மனிதர்களையும் அவர்களுடன் தொடர்பில் இருக்கும் இன்டர்நேஷனல் கடத்தல் மன்னனையும் கண்டுபிடிக்கிறார் சூர்யா. இத்தனைக்கும் இவர் ஒரு என்சிசி வாத்தியார். போலீஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, இங்கு வந்து இவர் பணியாற்றுவது எதற்காக என்பதையெல்லாம் ரசிகர்களுக்கு விளக்கும் டைரக்டர், இவருக்காக காத்திருக்கும் அனுஷ்காவையும் அவ்வப்போது நமக்கு காட்டி விடுகிறார். 



அனுஷ்கா, போன சிங்கத்திலிருந்தே இந்த துரைசிங்கத்தை ஃபாலோ பண்ணும் எதிர்கால மனைவி. இது போக இவரது ஸ்கூலில் படிக்கும் ஹன்சிகாவுக்கு துரைசிங்கத்தின் மீது காதல் வர, நமக்கு முறையே இரண்டு டூயட்டுகள் கிடைக்கின்றன. ஒரு விறுவிறு திரைக்கதைக்கு காதலோ, நகைச்சுவையோ பெரிய முக்கியமில்லை, அதிரடியான சம்பவங்கள் இருந்தால் போதும் என்பதை இதில் நிரூபிக்கிறார் ஹரி. சங்கிலிப் பின்னல் போல சடசடவென நகர்கிறது கதை. இடையே வரும் அனுஷ்காவும், ஹன்சிகாவும் வேகமான கதையை டிஸ்ட்ரப் பண்ணுகிறார்களோ என்று கூட தோன்றுகிறது சமயங்களில். 



நெடுங்காலமாக வெயிட் பண்ணும் அனுஷ்காவை கரம் பிடித்து, லாக்கப்பில் இருந்து தப்ப விடப்பட்ட இன்டர்நேஷனல் கிரிமினல் டேனியை தென் ஆப்பிரிக்காவுக்கே சென்று... தொடர்ந்து விமர்சனத்தை படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்....


Subscribe to get more videos :