சலங்கை ஒலி, நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் மனதை கவர்ந்த ஜெயப்ரதா தற்போது தமிழில் ‘உயிரே உயிரே’ படம் மூலம் தயாரிப்பாளராகி இருக்கிறார். அவரது மகன் சித்து ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹன்சிகா ஹீரோயின். ஏ.ஆர்.ராஜசேகர் இயக்குகிறார். அனூப் ருபென்ஸ் இசை. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு. நடிக்க வருவதற்கு முன்பே ஹன்சிகாவை சைட் அடித்த விவகாரத்தை சித்து கூறினார். அவர் கூறும்போது,’என் வீட்டிலேயே எனக்கு நடிப்பு சொல்லிக்கொடுக்க ஒரு இன்ஸ்டியூட் இருக்கிறது. அதுதான் எனது அம்மா ஜெயப்பிரதா. நடிகனாவதற்கு முன்பிருந்தே ஹன்சிகாவை திரையில் பார்த்து அவரை சைட் அடிக்க ஆரம்பித்துவிட்டேன். ஹீரோவாக நடிக்க முடிவு செய்தபோது ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார் என்று இயக்குனர் சொன்னதும் என்னால் நம்பவே முடியவில்லை. அவருடன் சென்டிமென்ட்டாக முதல் காட்சி இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். அதன்படி முதல்காட்சியில் அவரிடம் ஐ லவ் யூ சொல்லும் வசனத்தை படமாக்கினார்’ என்றார்.
Thursday, March 31, 2016
Related Videos

பாகுபலியில் தீபிகா... நல்லா கிளப்புறாங்கையா பீதியை

'ஜித்தன் ரமேஷ்' ஏப்ரல் 8 ஆம் தேதி மீண்டும் பிறக்கிறார்!

மானத்தை வாங்காதீர்கள் : நடிகர் சங்கத்துக்கு ஆர். கே. செல்வமணி வேண்டுகோள்!

கலையரசனுக்கு இது ’டபுள் கொண்டாட்ட ஏப்ரல் மாதம்’!

இறுதிக்கட்ட தருவாயில் பாபி சிம்ஹாவின் 'வல்லவனுக்கும் வல்லவன்'

'ஒரே ஒரு பாட்டு ஓஹோன்னு வாழ்க்கை : பாடகர் ஜெகதீஷ்