இது நம்ம ஆளு என்ற ஒரேபடம். பாண்டிராஜின் மொத்த எனர்ஜியையும் ஸ்ட்ரா போட்டு உறிகிறது. படம் வெளிவரும்வரை. அதன் இயக்குனர் என்றவகையில், அதுபற்றி கவலைப்பட்டுத்தானே ஆக வேண்டும். இது நம்ம ஆளு படத்தின் டீஸரை ட்விட்டரில் வெளியிட்டவர், கூடவே, நாங்க சொன்ன நேரத்துக்கு வரமாட்டோம், நெனைச்ச நேரத்துக்குதான் வருவோம் என்று கமெண்டும் போட்டுள்ளார். சிம்பும், டி.ஆரும் இன்னும் படத்தை வெளியிடாமல் இருப்பதை இந்த கமெண்டில் மீண்டும் இடித்துரைத்திருக்கிறார் பாண்டிராஜ்.விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்துக்கு பூஜை போட்ட போதும், வெற்றிப்படமாகவும், அதேநேரம் விரைவாகவும் முடிய வாழ்த்துகள் என்று, இது நம்ம ஆளு தாமதத்தை இடித்துக்காட்டியிருந்தார். இதோ மீண்டும் ஒருமுறை. டி.ஆர். மட்டும் வேண்டுமென்றே படத்தை இழுத்தடிக்கிறார். வாலு படத்துக்காக சேர்த்துக் கொண்ட கடனை கொடுத்தால்தானே இது நம்ம ஆளு படத்தை வெளியிட முடியும்? கோடிகளில் கடனிருந்தால், சொன்ன நேரத்துக்கு மட்டுமில்லை, நெனச்ச நேரத்துக்கும் வரமுடியாது.
Thursday, April 7, 2016
Related Videos

மானத்தை வாங்காதீர்கள் : நடிகர் சங்கத்துக்கு ஆர். கே. செல்வமணி வேண்டுகோள்!

விஜய்-60 பற்றி (Exclusive) நியூஸ்..!!

பாரதிராஜா இயக்கும் புதிய படம் "குற்றப்பரம்பரை"

சொல்லாமல் கொள்ளாமல் கம்பி நீட்டிய ஹீரோயின்... பர்த்டே கேக்குடன் காத்திருந்த தயார...

முன்னாள் காதலனுக்கு டஃப் கொடுக்கும் சமந்தா

பாலசந்தர் படம் பார்த்த மாதிரியிருக்கு...